HomeCurrent Affairs01.03.2019 Tamil Current Affairs

01.03.2019 Tamil Current Affairs

இந்திய நிகழ்வுகள்

மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆந்திராவின் புதிய இரயில் மண்டலத்தை அறிவித்துள்ளார். இது தெற்கு கடற்கரை இரயில்வே மண்டலம் (Southern Coast Railway) ஆகும்.

இதன் தலைமையிடமாக விசாகப்பட்டினம் உள்ளது. இது இந்தியாவின் 18வது இரயில்வே மண்டலமாகும்.

ஏப்ரல் 2019-ல் வெளியேறும் தொழில்துறை பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், உயர் கல்வி பயின்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியான ‘ஷிரியாஸ்’ (SHREYAS – Scheme For Higher Education Youth in Apprenticeship and Skills) என்ற திட்டத்தை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பின் 20-வது இந்தியா-இத்தாலி கூட்டு ஆணையத்தின் அமர்வானது புதுடெல்லியில் நடைபெற்றது. இதன் மூலம், இந்தியா மற்றும் இத்தாலிநாடுகளுக்கிடையே இயந்திரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளை மேம்படுத்த முடியும்.

உலக நிகழ்வுகள்

உலகின் மொத்த மக்கள் தொகையில் 94 சதவீதம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 96 சதவீதம்– கொண்ட 100 நாடுகளை உள்ளடக்கிய, “உள்ளடங்கிய இணைய குறியீட்டு பட்டியல் – 2019ல் இந்தியாவானது 47-வது இடத்தைப் பிடித்துள்ளது.

முகநூலிற்கான பொருளாதார புலனாய்வு பிரிவு வெளியிட்ட இந்த பட்டியலில் ஸ்வீடன்முதலிடத்திலும்சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா முறையே அடுத்த இரு இடங்களை பிடித்துள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்

புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சௌரவ் சௌத்ரி மற்றும் மானு பேக்கர் இணை தங்கம் வென்றுள்ளார்.

10 மீட்டர் ஏர்பிஸ்டல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சௌரவ் சௌத்ரி உலக சாதனையுடன் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

அறிவியல், தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குவோர்க்கு வழங்கப்படும் விருதான “சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2018” ஆம் ஆண்டிற்கான மருத்துவ துறைக்காக பிரிவில் டாக்டர். கணேசன் வெங்கட சுப்ரமணியன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பயின்று தற்போது பெங்களுரில்பணியாற்றி வருகிறார்.

நியமனங்கள்

போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் உயரிய அமைப்பான “போலீஸ் புகார்கள் ஆணையத்தின் (Police Complaints Authority) தலைவராகஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.தேஜி (P.S. Teji) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28: இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.இராமன், புகழ்பெற்ற இராமன் விளைவை கண்டுபிடித்த நாளான பிப்ரவரி 28 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தினத்தின் கருத்துரு:- “Science For People and People For Science” என்பதாகும்.

இராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு – பிப்ரவரி28, 1928. அதற்கான, இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு 1930.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest