இந்திய நிகழ்வுகள்
வரி ஏய்ப்பு மற்றும் வரிதவிர்த்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரி விதிப்புகளில் தகவல்கள் மற்றும் அதைச் சேகரிப்பதில் உதவி ஆகியவற்றின் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இந்தியா மற்றும் புருனே நாடுகளுக்கிடையே கையெழுத்தாகியுள்ளது.
தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹீ, 2019 பொதுத் தேர்தலுக்காகவடிவமைக்கப்பட்ட நான்கு மொபைல் செயலியை அறிவித்துள்ளார்.
C – VIGIL – தேர்தல் நன்னடத்தை விதிமீறல் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல் அளிப்பதற்காக.
வாக்காளர் உதவிமையம் (Voter’s Helpline) – வாக்காளர் பட்டியலில் தனது நிலையினை அறிவதற்காக.
சுவிதா செயலி (Suvidha) – தேர்தல் பணிகளுக்காக வேட்பாளர்களுக்கு பல்வேறு அனுமதிகளுக்காக இச்செயலி தொடங்கப்பட்டுள்ளது.
PWD செயலி – மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாளம் மற்றும் பதிவிடும் முறையை எளிதாக்குவதற்கு.
தண்ணீர் வீணாவதை தடுத்து தண்ணீரைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக, “ஜல் அம்ருதா” (Jal Amrutha) என்ற திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.
உலக நிகழ்வுகள்
காந்தியின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவைக் குறிப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனம், பூஜ்ஜிய மதிப்பிலான 12 வங்கிகளின், நினைவு ரூபாய் தாள்களின் வரிசையை, உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.
காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அவரின் அரசியல் வாழ்கையினை நினைவு கூறும் வகையில் அந்நோட்டில் அவரது புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏழாவது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம்- 2019 மார்ச் 2ஆம் தேதி (RCEP Intersessional Ministerial Meeting) உள்ள சீம ரீப் பகுதியில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார்.
பிராந்திய விரிhவான பொருளாதார கூட்டமைப்பு 2012 ல் தொடங்கப்பட்டது தற்போது அதில் 16 உறுப்பு நாடுகள் உள்ளன.
அறிவியல் & தொழில்நுட்பம்
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்காக “எமிசாட்” எனப்படும் ஒரு மின்னணு உளவுத்துறை செயற்கைகோளை இஸ்ரோ அமைப்பு விண்ணில் செலுத்த உள்ளது.
விருதுகள்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலாவது ‘‘P.V. நரசிம்மராவ் தேசிய தலைமை மற்றும் வாழ்நாள் சாதனை விருது” முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது.
முக்கிய தினங்கள்
பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day 2019) – மார்ச்-01
மார்ச் 01, 1976 அன்று புதுடெல்லியில் இந்திய சிவில் அக்கவுண்ட்ஸ் சர்விஸ் (ICAS) தொடங்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் 1 அன்று “பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day) கடைபிடிக்கப்படுகிறது.