HomeCurrent Affairs04.03.2019 Tamil Current Affairs

04.03.2019 Tamil Current Affairs

இந்திய நிகழ்வுகள்

57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (Organisation Of Islamic Cooperation) மாநாடு, அபுதாபியில் (ஐக்கிய அரபு அமீரகம்) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் “சுஷ்மா ஸ்hவராஜ்” பங்கேற்றுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற கட்டுமான தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி மற்றும் மாநாட்டில் பிரதமர் மோடி(இந்தியா), “ஏப்ரல் 2019 – மார்ச் 2020”, கட்டுமான – தொழில்நுட்ப ஆண்டாக (Construction – Technology Year – 2019-20) கடைபிடிக்க வேண்டும் என அறிவித்திருந்தார்.

ஊனமுற்றோர்களுக்கான விளையாட்டு மையமானது குவாலியரில் (மத்திய பிரதேசம்) அமையவுள்ளது. (Center For Disability Sports)

இந்த மையமானது பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பயன்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

உலக நிகழ்வுகள்

ப்ளும் பெர்க் அமைப்பு நடத்திய ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் (Global Health Index) இந்தியா 120-வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதலிடம் – ஸ்பெயின்

இரண்டாவது – இத்தாலி

“மருத்துவப் பொருட்கள் ஒழுங்கு முறை” துறையில் இந்தியா மற்றும் அர்ஜென்டினாவிற்கும் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வுஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்

துபாயில் நடைபெற்ற ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் (Dubai Tennis championship 2019) போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர்சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதன் மூலம், ரோஜர் பெடரர் ஒற்றையர் பிரிவில் 100 –வது சர்வதேச பட்டம் பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கின்றார்.

நியமனங்கள்

தேசிய புத்தக அறக்கட்டளையின் புதிய தலைவராக கோவிந்த் பிரசாத் சர்மாநியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

உலக வனவிலங்கு நாள் (World Wild Life Day 2019) – மார்ச் 03 வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் “உலக வனவிலங்கு நாள்” மார்ச் 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

2019 மைய கருத்து : நீருக்கு, கீழே வாழ்க்கை; மக்கள் மற்றும் கிரகம் (Life Below water : For people and planet)

தேசிய வனவிலங்கு நாள் – செப்டம்பர் 04

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest