இந்திய நிகழ்வுகள்
இந்தியாவின் உணவு பதப்படுத்தும் அமைச்சகமானது, கிராமப்புறங்களில் உணவு வீணாவதை தடுக்கும் நோக்கில் “கிராம சம்ரிதி யோஐனா” (Gram Samrithi Yojana) என்ற உணவு பதப்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இத்திட்டமானது உலக வங்கியின் உதவியுடன் கிராமப்புற தொழில்முனைவோர் மேம்பாடு, விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல், உணவுப் பதப்படுத்தலில் திறனை அதிகரிக்கும் வகையில் செயல்படுத்த உள்ளது.
குறிப்பு:
இத்திட்டம் முதற்கட்டமாக உத்திர பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது
உயிரி எரிபொருள் மற்றும் பயோ எத்தனால் ஆகியவற்றை பயன்படுத்த நிதி உதவி அளிக்கும் வகையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் “பிரதன் மந்திரி ஜீ-வன் யோஐனா” (Pradhan Mantri Ji-VAN Yojana-Jaiv Indhan Vatavaran Anukool Fasal Awashesh Nivaran) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள டெல்டா தரவரிசை அறிக்கையின் படி(Delta Ranking report), அசாமின் ஹைலகாண்டி மாவட்டம் செயல்திறன் அடிப்படையில் மொத்தம் 112 மாவட்டங்களில் முதலிடம் பிடித்துள்ளது.
உலக நிகழ்வுகள்
செனகல் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் “மேக்கி சால்” (Macky sall) என்பவர் 54.27% வாக்குகள் பெற்று செனகல் நாட்டின் ஜனாதிபதியாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
பல்கேரியா சர்வதேச மல்யுத்த போட்டி-2019-ல் ஆடவர் 65 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் பஜ்ராங் புனியர் அமெரிக்காவின் ஜோர்டான் அலிவரை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
விருதுகள்
ரஷ்ய தயாரிப்பான மிக்-21 விமானத்தைக் கொண்டு பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய “அபிநந்தன் வர்த்தமன்” என்பவருக்கு பகவான் மகாவீர் அஹிம்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதினை பெறும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நியமனங்கள்
முன்னாள் நிதிச்செயலாளரர், அஜய் நாராயண் ஜா (Ajay Narayan Jha) என்பவர் 15- வது நிதிக் குழுவின் உறுப்பினாரக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உறுப்பினராக இருந்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடாந்து “அஜய் நாராயண் ஜா” இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குறிப்பு:
அரசியலமைப்பு விதி 280-ன் படி குடியரசுத் தலைவர் நிதிக் குழுவை அமைக்கிறார்.
15-வது நிதிக் குழுவின் தலைவர் – N.K. சிங்.
14-வது நிதிக் குழுவின் தலைவர் – Y.V. ரெட்டி.
ஒடிசா மாநிலத்தின் லோக் ஆயூக்தா அமைப்பின் முதல் தலைவராக, முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி “அஜித் சிங்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பு:
லோக் ஆயூக்தா மசோதாவை சட்ட பேரவையில் நிறைவேற்றிய முதல் மாநிலம்-ஒடிசா
லோன் ஆயூக்தா சட்டத்தை முதன் முறையாக நிறைவேற்றிய மாநிலம்- மகாராஷ்டிரா
முக்கிய தினங்கள்
தேசிய பாதுகாப்பு தினம்-மார்ச் 04 (National Security Day)
இராணுவ அதிகாரிகள், பாரா – இராணுவம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் கமாண்டோக்கள் போன்ற பாதுகாப்பு படையினரின் பணியை பாராட்டி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 அன்று “ராஷ்டிரிய சுரக்ஷா திவாஸ்” என்றழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
குறிப்பு:
இத்தினானது 1972 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 48-வது தேசிய பாதுகாப்பு தினம் இந்தாண்டு கொண்டாடப்பட்டது.