தமிழக நிகழ்வுகள்
பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக, சென்னையை தiமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கிக்கு, தமிழக அரசானது சிறந்த வங்கிக்கான விருதை வழங்கியுள்ளது.
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் M.K. பட்டாச்சாரியா ஆவார்.
இந்திய நிகழ்வுகள்
“நெகிழி கழிவுகளற்ற இந்தியாவிற்கான” கீதமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஹர்ச வர்த்தனால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது 2022ம் ஆண்டில் இந்தியாவை நெகிழியற்ற தேசமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இது 7 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில், மற்றொரு நிலநடுக்கமானி(Seismometer) ஏற்படுத்தப்படும் என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS – National Centre of Seismology) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை ஆகியவைஅறிவித்துள்ளது.
நாட்டின் நான்காவது நிலநடுக்கமானியானது பால்கார் மாவட்டத்தின் ஹால்டிபடா மற்றும் உதாவா சாலையின் மீது அமைக்கப்பட உள்ளது.
உலக நிகழ்வுகள்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆளில்லா கேப்சூல் குழுவுடன் பால்கன் – 9 – ஐ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
இது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
சீனாவின் ஹாங்ஷீ நகரில் வரும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் முதன்முறையாக ஓசேனியா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியாக உள்ள, ஆசிய விளையாட்டு போட்டி முதன் முதலில் 1952ல் நடத்தப்பட்டது.
குறிப்பு:
ஓசேனியா நாடுகள் என்பவை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பசுபிக் பெருங்கடல் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
அறிவியல் & தொழில்நுட்பம்
விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான அறிவை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் இஸ்ரோவானது (ISRO) “இளம் விஞ்ஞானி கரியகாம்” (Yuva Vigyani Karyakram) என்ற “இளம் அறிவியலாளர் திட்டம்” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டமானது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு என செயல்படுத்தப்பட உள்ளது.
விருதுகள்
புதுடெல்லியில் நடைபெற்ற புத்தாக்கம் மற்றும் நிர்வாகம் மீதான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மாநாட்டின் 3வது பதிப்பின் போது, புதுமைக்கான கலாம் விருது 2019 வழங்கப்பட்டது.
சர்வதேச தரத்திலான வசதிகளுடன் நவீனப் போக்குவரத்து அமைப்பை அளித்ததற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு புதுமைக்கான கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவராக பகவான் லால் சஷினிஎன்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையச் சட்டம் 1993ன் கீழ் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான அரசியலமைப்பு சரத்து – 338B ஆகும்.
குறிப்பு:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய சட்ட திருத்தம் – 102வது சட்டதிருத்தம்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய சட்ட திருத்த மசோதா – 123வது சட்டதிருத்த மசோதா