HomeCurrent Affairs07.03.2019 Tamil Current Affairs

07.03.2019 Tamil Current Affairs

தமிழக நிகழ்வுகள்

தமிழக விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக, “இ-அடங்கல்” என்ற மொபைல் செயலியை தமிழக வருவாய் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இ-அடங்கல் – பயிர் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு

இந்திய நிகழ்வுகள்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டமான “பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மன்-தன் யோஜனா” (Pm-Sym : Pradhan Mantri Shram Yogi Maan-dhan) என்ற திட்டம் மார்ச் 05, 2019 அன்று அகமதாபாத்தின் (குஜராத்) வஸ்த்ரா நகரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 100 ரூபாய் பிடித்தம் செய்து 60 வயதிற்கு பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

உலக நிகழ்வுகள்

NGO Green peace என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்-2018–ல் (Global Air Pollution – 2018) இந்தியாவின் குருகிராம் (ஹரியானா) முதலிடத்தில் உள்ளது. காசியாபாத் (உத்திரபிரதேசம்) 2–ம் இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 இந்திய நகரங்கள் உள்ளன.

உலகின் மாசு படிந்த தலைநகங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும், டாக்கா (வங்காள தேசம்) 2–ஆம் இடத்திலும் உள்ளது.

இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான அல் நாகா (Exercise Al Nagah) ஓமன் நாட்டின் ஜபல் அல் அக்தர் மலைப் பகுதியில் மார்ச் 12, 2019 முதல் நடைபெற உள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்

பெண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் “மட்டை வீச்சாளர்” தரவரிசையில்இந்திய நட்சத்திர வீரர் ஸ்ம்ரிதி மந்தனா முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி இரண்டாம் இடத்திலும், இந்தியாவின் மித்தாலிராஜ் நான்காவது இடத்திலும் உள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

சீன செய்தி நிறுவனமான ஜின்ஷீவா, தனது முதல் பெண் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான செய்தி வாசிப்பாளர் பணியில்அமர்த்தியுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவிற்கு ஷின் ஷியாவ்மென்ங் எனப் பெயரிடப்பட்டுள்ளது

விருதுகள்

இந்திய ஏவகணைத் திட்டங்களில் தன்னுடைய தனித்துவ தலைமைப் பண்பிற்காக, “2019 ஏவுகணை அமைப்புகள் விருது” என்னும் பெருமை விருதினை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் G. சதீஷ் ரெட்டிக்கு அமெரிக்க வானியல் மற்றும் விண்வெளியில் நிறுவனம் வழங்கியுள்ளது.

முக்கிய தினங்கள்

தேசிய பாதுகாப்பு வாரம்-2019–(மார்ச் 4-10) (National Safety week)

தேசிய பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு வாரமானது மார்ச் 4 முதல் மார்ச் 10 வரை கடைபிடிக்கப்படுகிறது.

2019–தேசிய பாதுகாப்பு வார மையக்கருத்து: “நாட்டை கட்டமைப்பதற்கான நீடித்த அறுவடை பாதுகாப்புக்கான கலாச்சாரம் என்பதாகும். (Cultivate and Sustain a Safety Culture for Building Nation)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest