தமிழக நிகழ்வுகள்
அரசு மருத்துவமனையில் டிரான்ஸ்-கேத்தெடர் பெருந்தமனித் தடுப்பிதழ்உட்பொருத்துதலை (TAVI-Transcatheter Aortic valve Implantation) அறிமுகப்படுத்தியநாட்டின் முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத முதிய இதய நோயாளிகளின் மீது TAVI சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
TAVI ஆனது சென்னை ஓமந்தூரார் எஸ்டேட்டில் உள்ள தமிழக அரசு பன்நோக்கு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தூப்ரி மாவட்டத்தில் CIBMS-ன் (விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு) கீழ் BOLD-QT என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
BOLD-QIT-> Border Electronically Dominated QRT Interception Technique-இத்திட்டாமனது இந்திய-வங்கதேச எல்லையைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றைப் புனரமைத்தல் போன்ற வறட்சித் தடுப்பு நடவடிக்கையின் மீது கவனம் செலுத்துவதற்காக கர்நாடக மாநில அரசானது “ஜல் அம்ருதா” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
உலக நிகழ்வுகள்
ஈஸ்டோனியா நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக கஜா கல்லாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
2019 ஆம் ஆண்டின் தேசிய ஸ்டெம் (STEM- Science, Technology, Engineering and Maths-அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கல்வி விருதானதுஅமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி “காவ்யா கோப்பராப்பு”-விற்கு வழங்கப்பட்டுள்ளது.
கிலியோ பிளஸ்டோமாவின் மேம்பட்ட சிகிச்சைகளுக்கு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் “ஸ்வச் சர்வேக்சேன் விருது-2019”ஐ புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
இதில், இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரமானது தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இடம்-அம்பிகாபூர், சத்தீஸ்கர்
மூன்றாம் இடம்-மைசூர், கர்நாடகா.
சிறிய நகரங்களின் தூய்மை நகரத்திற்கான விருது, தில்லிக்கும், பெருநகரங்களில் தூய்மை நகரத்திற்கான விருது அகமதாபாத், குஜராத் மாநிலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக “அனில் கும்ளே” (ICC – Cricket Committee new Chairman) நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
உலக பாலியல் சுரண்டலுக்கெதிரான தினம்-மார்ச்-04.
பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும்பாலும் காணப்படும் பாலியல் சுரண்டல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 அன்று உலக பாலியல் சுரண்டலுக்கெதிரான தினம் அனுசரிக்கப்படுகிறது.