தமிழக நிகழ்வுகள்
சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்எம்.ஜி. இராமச்சந்திரனின் பெயர் சூட்டப்பட உள்ளது என்று இந்தியப் பிரதமர் மார்ச் 06 அன்று அறிவித்துள்ளார்.
மார்ச் 06 அன்று தமிழக முதலமைச்சர் “அம்மா சமுதாய வானொலியைத்” தொடங்கினார்.
இந்திய நிகழ்வுகள்
மத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 12 முனைகளைக் கொண்டதாக (பாலிகோன் – பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களும் எளிதில் உணரும் வகையில்உருவாக்கப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
கடந்த நான்காண்டுகளில் உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA – International Energy Agency) 125வது உறுப்பினராக இணைவதற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
உயிரி ஆற்றல் மீதான IEA-ன் கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம் என்பது நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பிற்கான ஒரு சர்வதேசத் தளமாகும்.
விளையாட்டு நிகழ்வுகள்
இந்தியாவின் 61வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் ஈரோட்டைச் சேர்ந்த P. இனியன் (16) பெற்றுள்ளார்.
உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி (FIG World Cup 2019) அஜர்பைஜானில் மார்ச் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், கத்தார் நாட்டில் வருகிற 20ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
2019ம் ஆண்டின் மெக்சிகன் ஓபன் போட்டியானது, மெக்சிகோவின் பிரின்சஸ் முண்டோ இம்பிரியலில் நடைபெற்றது.
ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக்கியர்கியோஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஜெவ்ரேவை வீழ்த்தி தனது வாழ்நாளின் 5வது ATP பட்டத்தை வென்றார்.
விருதுகள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில், இந்தியா சேர்ந்த 44 பெண் சாதனையாளர்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யு.என்.டி.பி.) நல்லெண்ண தூதராக பத்மலட்சுமிநியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வரும் சுபாஷ் சந்திர கார்க் தற்போது மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.