இந்திய நிகழ்வுகள்
ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய துறை, உலகில் இயற்கை உணவுகள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் சிக்கிம்(இந்தியா) மாநிலம் 100 சதவீதம் இயற்கை உணவுகள் உள்ள மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஏப்ரல் 13, 1919-ல் பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் சுமார் 1600 பேர் கொல்லப்பட்டனர். இதன் நூறாவது நினைவு நாள் (ஏப்ரல் 13 2019) வருவதை முன்னிட்டு பிரிட்டிஷ் அரசு இந்த படுகொலைக்கு மன்னிப்பு கேட்கத் தயாராகி வருகிறது.
சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே துறை சார்ந்த ஒத்துழைப்பைஅதிகரிக்கும் வகையில் இந்தியாவானது தனது 3வது ஐ.டி வளாகத்தை சூஸூ நகரில் (சீனா) கட்டமைத்து வருகிறது.
உலக நிகழ்வுகள்
சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் உலகில் மிக மகிழ்சியான நாடுகள் பட்டியலில், டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் விஸ்ப் மாவட்டத்தில் உள்ள ராண்டாவின் ஜெர்மேட் மற்றும் கிரேசேன் என்ற இரு மலைகளை இணைக்கும் வகையில், உலகின் மிக நீண்ட நடை தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் 278 அடி உயரத்தில், 1,620 அடி நீளம் மற்றும் 2 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு யோரப் என்று பெயரிடப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
கோவையில் நடைபெற்ற ஹீரோ கால்பந்து தொடரில் சென்னை சிடி அணி, மினர்வா பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அமைதியற்ற சூழல் நிலவுவதால் இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் மற்ற நாட்டுடன் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஆசிய ஜுனியர் மல்யுத்த போட்டிகள் மற்றும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டிகளை நடத்துவதில் இருந்து இந்தியாவக்கு விலக்கு அளித்துள்ளது.
நியமனங்கள்
பாகிஸ்தானில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்து தலித் சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரி கோலி என்ற பெண், பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் ஒரு நாள் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் பாகிஸ்தான் செனட் சபையில் தலைவர் ஆன முதல் இந்து தலித் பெண் ஆவார்.