HomeCurrent Affairs11.03.2019 Tamil Current Affairs

11.03.2019 Tamil Current Affairs

தமிழக நிகழ்வுகள்

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ‘சீர்மரபினர் சமுதாயத்தினர்’ என்ற பெயரை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என மாற்றி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக சீர்மரபினர் பிரிவின் கீழுள்ள 68 சமுதாயத்தினர் சீர்மரபினர் பழங்குடியினர் என்று மீண்டும் அழைக்கப்படுவார்கள்.

இந்திய நிகழ்வுகள்

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 11 மற்றும் 15ம் தேதிகளில், நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளைவழங்க உள்ளார்.

தமிழக திரையுலகில் பிரபலமான, பிரபுதேவா மற்றும் ஷங்கர் மகாதேவன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC) மக்களுக்கு 27% இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அந்த மாநில காங்கிரஸ் அரசு அவசர சட்டம்கொண்டு வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் தற்போது ஓபிசி பிரிவு மக்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக நிகழ்வுகள்

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா அளித்த சலுகை மே மாதத்துடன் முடிவடைகிறது. இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா நாளொன்றுக்கு 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அறிவியல் & தொழில்நுட்பம்

இந்திய பெருங்கடல் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் இணைந்து புதிய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் புதிய ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளது.

விருதுகள்

2019 மார்ச் 6 முதல் 10 வரை ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற உலகின் முன்னணி சுற்றுலா வர்த்தக காட்சியான “ITB Berlin 2019” நிகழ்வில் ‘TV Cinema Spot’ பிரிவில், இந்தியாவிற்கு “Golden City Gate Tourism Awards 2019” என்ற சர்வதேச விருதின் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சுற்றுலாத்துறையின் “Incredible India 2.0” பிரச்சார இயக்கத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

NMTMBS எனப்படும் நகர்வுத்திறன் மற்றும் பேட்டரி சேமிப்பு மாற்றத்திற்கான தேசியத் திட்டம் (National Mission on Transformative Mobility and Battery Storage), தலைவராக “அமிதாப் காந்த்” நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயலராக பாஸ்கர் குல்பே மீண்டும் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest