HomeCurrent Affairs14.03.2019 Tamil Current Affairs

14.03.2019 Tamil Current Affairs

இந்திய நிகழ்வுகள்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் திருப்புவன பட்டுச் சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த உத்திரகாண்டா மாவட்டத்தில் விளையக்கூடிய சிர்சி சுப்பாரி (SIRSI SUPARI) என்ற பாக்கு (Arecnut) வகைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஈரோட்டில் விளையக்கூடிய “ஈரோடு மஞ்சளு”க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராம ஜென்ம பூமி பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி “இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

மற்ற இரு உறுப்பினர்கள்

1) ஸ்ரீ ரவிசங்கர்

2) ஸ்ரீ ராம் பஞ்ச்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வணிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கான, இண்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT – Internet of Things) இந்திய காங்கிரஸ் மாநாட்டின் 4வது பதிப்பு பெங்களுரில் நடைபெற்றது.

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவின் பகல்பொழுது தோன்றும் பகுதியில் நீர் மூலக்கூறுகள் சுற்றி வருவதாக நாசாவின் நிலவு உலவுப்பணி விண்கலமான “LRO” – (Lunar Reconnaissance Orbiter) கண்டறிந்துள்ளது.

நிலவில் கண்டறியப்பட்டுள்ள இந்த நீரானது எரிபொருள் தயாரிப்பதற்கு அல்லது சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாப்பதற்கு மனிதர்களால் பயன்படுத்த தகுதியுடையது.

விருதுகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் சவான் நினைவாகவழங்கப்படும் யஸ்வந்த் ராவ் சவான் தேசிய விருதானது, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக 2018ம் ஆண்டிற்கான யஸ்வந் ராவ் சவான் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் – சக்தி காந்த தாஸ்

2019ம் ஆண்டு மார்ச் 11 அன்று இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை 112 நபர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இவ்விருதுகளில், பத்ம ஸ்ரீ விருதானது முதன்முதலாக திருநங்கையான நர்த்தகி நடராஜ் (Nartaki Natraj) உள்பட 94 பேருக்கு வழங்கப்பட்டது.

முக்கிய தினங்கள்

தேசிய புகைபிடித்தல் இல்லாத நாள் – மார்ச் 13, 2019 (National No Smoking Day)

புகைப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் “மார்ச் இரண்டாவது புதன்கிழமை” (2019ல் மார்ச் 13) புகைபிடித்தல் இல்லாத நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இத்தினமானது 1985 ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக புகையிலை இல்லா நாள் (World No Tobacco Day) ஆண்டுதோறும் மே – 31 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

தண்டியாத்திரை தொடங்கிய நாள் – மார்ச் 12

இந்தியர்கள் மீது விதித்த உப்புவரியை எதிர்த்து அறவழியில் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற போராட்டம் உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டியாத்திரை ஆகும்.

இப்போராட்டமானது மார்ச் 12, 1930 முதல் ஏப்ரல் 6, 1930 வரை தடையை மீறி உப்பெடுக்கும் நடைபயணமாக தொடர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest