HomeCurrent Affairs15.03.2019 Tamil Current Affairs

15.03.2019 Tamil Current Affairs

உலக  நிகழ்வுகள்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியே திருத்தப்பட்ட பிரெக்ஸிட்(BREXIT) ஒப்பந்த மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனானது 1973ம் ஆண்டு இணைந்தது.

ஐரோப்பிய யூனியனில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன.

அறிவியல் & தொழில்நுட்பம்

இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வகமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டு ஏவுகலன் அமைப்பான “பினாகாவை” இராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமான“ஆஸ்ட்ரோசாட்”-ஐப் பயன்படுத்தி கோள வடிவ நட்சத்திரங்களான NGC 2808-ல் உள்ளபுதிய புற ஊதா நட்சத்திரக் கூட்டங்களை திருவனந்தபுரம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதலாவது பல்வேறு அலைநீளம் கொண்ட விண்வெளி ஆய்வகமாகும்.

இது 2015ம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று பிஎஸ்எல்வி – எக்ஸ்எல் (PSLV-XL) மூலம் ஏவப்பட்டது.

நியமனங்கள்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக (Chief Scientist of WHO) டாக்டர். சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சௌமியா சுவாமிநாதன் தற்போது உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குநராக பணிபுரிகிறார்.

 பொருளாதார நிகழ்வுகள்

உலக தங்க ஆணையம் (World Gold Council) வெளியிட்டுள்ள உலகின் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவானது 11வது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் அமெரிக்காவும், ஜெர்மனி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

முக்கிய தினங்கள்

உலக சிறுநீரக தினம் – மார்ச் 14, 2019 (மார்ச் இரண்டாவது வியாழன்)

சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும்ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் (World Kidney Day) கடைபிடிக்கப்படுகிறது.

2019ம் ஆண்டின் உலக சிறுநீரக தின மையக்கருத்து: “எங்கும் அனைவருக்கும் சிறுநீரக சுகாதாரம்” (Kidney Health for Everyone Everywhere) என்பதாகும்.

உலக பை (π) தினம் – மார்ச் 14

கணிதத்தில் பை (π)யின் மதிப்பு ஏறத்தாழ 3.14 ஆகும்.

கணிதவியலாளர்களால் உலகம் முழுவதும், மார்ச் 14ம் தேதி உலக பை (π) நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

புத்தகங்கள்

“Tiger Woman” என்ற தலைப்பிலான புத்தகம், பெங்காலி நாவலாசிரியர் சிர்ஷோ பந்தோபதியா (Sirsho Bandopadhyay) என்பவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகமானது, அருணாவா சின்ஹா என்பவரால் எழுதப்பட்ட “Shardul Sundari” என்ற நூலின் மொழிபெயர்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest