இந்திய நிகழ்வுகள்
தேர்தல் ஆணையமானது முதல் முறையாக தேர்தல் பார்வையாளர்களுக்கு அவர்கள் அறிக்கைகளை சமர்பித்திட உதவிடுவதற்காக “Observer App” எனப்படும் ஒரு கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அனைத்து முக்கிய அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை செய்திகள் ஆகியவற்றை பெற முடியும்.
இந்திய இராணுவத்திற்கும் 16 ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையேயான ஆப்பிரிக்க-இந்திய கூட்டு களப் பயிற்சியான “AFINDEX-19” என்ற பயிற்சியானது மார்ச் 18 முதல் 27 வரை புனேவில் நடைபெற உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தனித்துவம் வாய்ந்த புதியவகை நட்சத்திரக் குள்ளத் தவளையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கேரளாவின் குறச்சியார் மலையில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக நிகழ்வுகள்
ஐ.நா. சுற்றுச்சூழல் மன்றத்தின் (UN Environment Assembly) நான்காவது அமர்வானது, கென்யாவிலுள்ள நைரோபியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் மையக்கருத்து: “சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் நிலையான உற்பத்திக்கான புதுமையான தீர்வுகள் என்பதாகும் (Innovative Solution for Environmental Challenges and Sustainable Consumption and Production).
விளையாட்டு நிகழ்வுகள்
17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட உள்ளதாக, தலைவர் ஜியானி இன்பான்டினோ அறிவித்துள்ளார்.
இதற்கு முன், கடந்த 2017 ல் இந்தியாவானது U-17 ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தியது.
அறிவியல் & தொழில்நுட்பம்
அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் இருந்து “கியுவா யூ” (Guihua Yu) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, சுத்தமான குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
இது சூரிய ஒளியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீர் நெருக்கடி மற்றும் வறுமை பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்த முடியும்.
விருதுகள்
மகளிர் தின (மார்ச்-8) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தனது பங்களிப்பை அளித்தற்காக, புகழ்பெற்ற கதக் நடன இயக்குநர் சீமா மேத்தாவுக்கு (Seema Mehta) “நாரி புரஷ்கார் விருது” வழங்கப்பட்டது.
முக்கிய தினங்கள்
உலக உறக்க தினம் – மார்ச் 15 (World Sleep Day)
ஆரோக்கிய நலனிற்கு உறக்கமென்பது எவ்வாறு முக்கியம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக உறக்க தினமானது மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டின் உலக உறக்க தின மையக்கருத்து: “ஆரோக்கியமான உறக்கம், ஆரோக்கிய வயது முதிர்வு” (Healthy Sleep, Healthy Aging) என்பதாகும்.