இந்திய நிகழ்வுகள்
மிகவும் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான டி.கே. பட்டமாளின் 100வது நினைவுதினம் மார்ச் 19 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இசைக் கச்சேரிகளில் ராகம், தாளம் மற்றும் பல்லவி ஆகிய மூன்றையும் நிகழ்த்திய முதலாவது பெண்மணி இவரே ஆவார்.
உலக நிகழ்வுகள்
பிரேசில் தலைமையில் நடைபெறும் முதல் பிரிக்ஸ் (BRICS) மாநாடானது கியூரிடிபா(Curitiba) என்ற இடத்தில் நடைபெற்றது.
BRICS – Brazil, Russia, India, China, South Africa
BRICS அமைப்பு ஜூன் 2006ல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் “ஷாங்காய்” – இல் உள்ளது. 2010ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தென்-மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான ஐடாய் (Idai cyclone) புயலானது பெய்ரா (Beira) நாட்டின் மொசாம்பிக் நகரத்தை தாக்கியது.
விளையாட்டு நிகழ்வுகள்
ESPN என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள உலகப் புகழ்பெற்ற 100 வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏழாவது இடம் பிடித்துள்ளார்.
விருதுகள்
சிறந்த வணிக மாற்றுவோருக்கான ஆண்டு விருதானது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் வழங்கப்பட்டது.
GST வரியை நடைமுறைப்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
DD மகிளா கிஷான் விருதானது ஸ்வாதி ஷிங்கடே என்பவருக்கு வழங்கப்பட்டது.
நியமனங்கள்
மலாவி குடியரசு நாட்டிற்கான இந்திய உயர் ஆணையராக அனுராக் பூஷன்நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் உஷ்பெகிஸ்தான் நாட்டிற்கான இந்தியத் தூதராக சந்தோஷ் ஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.