உலக செய்திகள்
பிரேசில் தலைமையில் நடைபெறும் முதல் பிரிக்ஸ் (BRICS) மாநாடானதுகியூரிடிபா (Curitiba) என்ற இடத்தில் நடைபெற்றது.
தென்-மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான ஐடாய் (Idai cyclone)புயலானது மொசாம்பிக் நாட்டின் நகரத்தை பெய்ரா (Beira) தாக்கியது
தேசிய செய்திகள்
DD மகிளா கிஷான் விருதானது ஸ்வாதி ஷிங்கடே என்பவருக்கு வழங்கப்பட்டது.
உஷ்பெகிஸ்தான் நாட்டிற்கான இந்தியத் தூதராக சந்தோஷ் ஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் 129-ஆவது நிறுவன தினத்தையொட்டி “கும்ப்” கண்காட்சி டெல்லியில் நடத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி சி – 45 ராக்கெட் மூலம் எமிசாட் உள்ளிட்ட 30 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
மலாவி குடியரசு நாட்டிற்கான இந்திய உயர் ஆணையராக அனுராக் பூஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோடக் மஹிந்த்ரா வங்கியின் நிர்வாக இயக்குனர்களாக டி எஸ் மணியன் மற்றும் கௌரங் ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
வர்த்தக செய்திகள்
சிறந்த வணிக மாற்றுவோருக்கான ஆண்டு விருதானது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் வழங்கப்பட்டது.
விளையாட்டு செய்திகள்
ESPN(Entertainment and Sports Programming Network) என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள உலகப் புகழ்பெற்ற 100 வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏழாவது இடம் பிடித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ISL கால்பந்து போட்டி 2019- இல் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியை தோற்கடித்து பட்டம் வென்றது
இரங்கல்
மூத்த பத்திரிகையாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான டாரில் டி மான்டே(மும்பை) காலமானார்